அநுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!
அனுராதபுரம், மார்ச் 17: அனுராதபுரம் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலந்த மண்டுரங்க ரத்நாயக்க என்பவர் இன்று (17) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, மார்ச் 24ஆம் தேதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் கல்னேவ புதிய நகரத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் என்பதும், அவர் கல்னேவ நிதிகும்பயாய பகுதியில் பொலிஸாரும் சிறப்புப் படையினரும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை தொடர்ந்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News
0 Comments