மலேசியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞர்!!
மலேசியாவில்(Malaysia) உள்ள கட்டுமானப் பொருட்கள் சேமிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கையர் ஒருவரும் ஒரு நாயும் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழியர்கள் உடலை அணுகி ஆய்வு செய்வதற்கு முன்பு, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் உடலில் எந்த காயங்களும் இல்லை, மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#sltamilnews @SrilankaTamilNews
0 Comments