Ticker

10/recent/ticker-posts

திரைப்பட பாணியில் படுகொலை முயற்சி! நால்வர் கைது!!

 திரைப்பட பாணியில் படுகொலை முயற்சி! நால்வர் கைது!!

தமிழ்த்திரைப்படங்களின் பாணியில் நபரொருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த நால்வர் கொண்ட கும்பல் ஒன்று களுத்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி களுத்துறை பண்டாரகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் கூரிய கத்திகளால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்தார்.


சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், பாணந்துறை, பயாகலை, பண்டாரகம, ஊரகஹ பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

குறித்த நால்வரும் தமிழ்த்திரைப்பட பாணியில் களுத்துறை பிரதேசத்தில் ஒப்பந்த அடிப்படையில் அடிதடி, படுகொலை முயற்சிகள், வாள்வெட்டுத்தாக்குதல் போன்ற அடாவடிகளில் ஈடுபடும் அடியாட்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் பிரதேச வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

#sltamilnews @Srilanka Tamil News

Post a Comment

0 Comments